ஆண்டுத் தேர்வு அறிவிப்பு

தொண்டி – பிப்ரவரி 28

நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸாவின் மாணவ மாணவிகளுக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித் தேர்வு இன்ஷா அல்லாஹ் வருகிற 11/03/2023 சனிக்கிழமை முதல் துவங்குகிறது.

வகுப்புவாரியாக கால அட்டவணை.






எனவே, அனைத்து மாணவ மாணவியரின் பெற்றோரும் தமது பிள்ளைகளை தேர்வுக்கு தயார் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிர்வாக அறிவிப்பு.

குடியரசு தின விழா நிகழ்ச்சி.

தொண்டி – ஜனவரி 29,2023

தொண்டி இறைமறை இயக்கம் அறக்கட்டளை சார்பில் இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி தொண்டி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மதரஸாவின் மாணவர் J. ஹைஸம் ஜக்கரிய்யா கிராஅத் ஓதினார்.

தர்பியத்துல் அத்ஃபால் ஒருங்கிணைப்பாளர் மௌலானா, ஹாஃபிழ் N. முஹம்மது உமர் ஹஸனீ M.A. அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் பைத்துல் மால் சபை தலைவர் அல்ஹாஜ் S. சுலைமான் அவர்கள் இந்திய திருநாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் இறைமறை இயக்கம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பெரிய பள்ளிவாசல் பைத்துல் மால் சபை உறுப்பினர்கள், பொது மக்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மௌலானா S. செய்யது முஹம்மது காசிம் யூசுஃபீ மற்றும் ஹாஃபிழ் S. முஹம்மது ஃபஹீம் அவர்கள் செய்திருந்தனர்.

இணைய தளம் அறிமுகம்.

அதிவேக பாய்ச்சலில் நகரும் இன்றைய நவீன யுகத்தில் நமது மார்க்கத்தையும் அதே வேகத்துடன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லையாயின் அசத்திய கொள்கைகள் மக்களை ஆட்கொண்டு தவறுகள் பல உருவாக காரணமாகிவிடும்.

இந்த அடிப்படையில் தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டி நகரில் மார்க்கக் கல்வி போதித்து வரும் நமது தர்பியத்துல் அத்ஃபால் மத்ரஸாவின் செயல்பாடுகளை இணைய ரீதியாக முன்னெடுத்துச் செல்ல ஒரு புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மதரஸாவின் அனைத்து வரலாற்று நிகழ்வுகள், தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

அத்தோடு அன்றாட மத்ரஸாவின் நிகழ்வுகளும் நமது மாணவ மாணவியர் பங்கு கொள்ளும் நிகழ்வுகளின் வீடியோக்களும் வெளியிடப்படவுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.