தினசரி தகவல்கள்

பெண்களுக்கான பரிசுப் போட்டி

நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மதரஸாவின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் பெண்களுக்கான பரிசுப் போட்டி.

ல்குர்ஆனை அறிந்து விளங்குவோம்.

சூரா அந்நூர் – விளக்கம்.

குர்ஆன் விளக்கவுரை அடங்கிய புத்தகத்தை PDF ஆக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குர்ஆன் மொழிப் பெயர்ப்புகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்..

புனித திருக்குர்ஆனை பல்வேறு அறிஞர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து நமக்கு வழங்கியுள்ளனர். அவற்றில் நமக்கு கிடைத்தவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இங்கு தொகுத்துத் தந்துள்ளோம்.

கீழே உள்ள லிங்குகளை க்ளிக் செய்தால் PDF கோப்பு டவுன்லோட் ஆகும். அவற்றை உங்களது மொபைலில் Adobe Acrobat Reader உதவியுடன் எளிதாக படிக்கலாம்.


இணைய தளம் அறிமுகம்.

அதிவேக பாய்ச்சலில் நகரும் இன்றைய நவீன யுகத்தில் நமது மார்க்கத்தையும் அதே வேகத்துடன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லையாயின் அசத்திய கொள்கைகள் மக்களை ஆட்கொண்டு தவறுகள் பல உருவாக காரணமாகிவிடும்.

இந்த அடிப்படையில் தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டி நகரில் மார்க்கக் கல்வி போதித்து வரும் நமது தர்பியத்துல் அத்ஃபால் மத்ரஸாவின் செயல்பாடுகளை இணைய ரீதியாக முன்னெடுத்துச் செல்ல ஒரு புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மதரஸாவின் அனைத்து வரலாற்று நிகழ்வுகள், தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

அத்தோடு அன்றாட மத்ரஸாவின் நிகழ்வுகளும் நமது மாணவ மாணவியர் பங்கு கொள்ளும் நிகழ்வுகளின் வீடியோக்களும் வெளியிடப்படவுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.