இறைமறை இயக்கம் அறக்கட்டளை.
அறிமுகம்
தொண்டி மாநகரில் அருளாளன் அல்லாஹ் அகிலத்தாரின் நேர்வழிக்காக அருளிய அருள்மறையாம் அல்குர்ஆனின் போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக உருவான அமைப்பே இறைமறை இயக்கம் ஆகும்.
அல்ஹாஜ் M முஹம்மது ஷஃபிவுத்தீன் அவர்களால் இவ்வமைப்புக்கு இறைமறை இயக்கம் (Al Qur’an Movement) என்ற பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
தமிழகத்தில் பரவலாக எல்லோராலும் பாவா என்று அன்போடு அழைக்கப்பட்ட ஆரணி கமாலுதீன் ஹஜ்ரத் அவர்களால் ‘இறைமறை இயக்கம்’ மூலம் நடத்தப்படும் சிறுவர் சிறுமியர் மத்ரஸாவிற்கு ‘ தர்பியத்துல் அத்ஃபால் ’ என்றும் பெயர் சூட்டப்பட்டு அவர்களது துஆவுடன் காத்தான்குடி மத்ரஸாவின் முதல்வர் அதிரை அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களால் 28/4/1990 அன்று மத்ரஸா துவக்கப்பட்டது.
அன்று முதல் நமதூரின் அனைத்து ஜமாஅத்துகளுடன் இணைந்து அல்குர்ஆன் வாழ்க்கை நெறியை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கில் அனைத்து பகுதிகளிலும் மக்தப் மத்ரஸாக்களை நடத்துவதோடு அவ்வப்போது திருக்குர்ஆன் மாநாடுகள் நடத்துவது, இஸ்லாமிய நூற்கள் வெளியிடுதல், கோடை கால பயிற்சி, பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்புகளையும் நடத்தி வருகிறோம்
இறைமறை இயக்கம் துவங்கப்பட்டு சுமார் 32 ஆண்டுகளைக் கடந்தும் அல்லாஹ்வின் அருளால் அவனது திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நமது மக்களின் பொருளாதார உதவிகளால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
இறைமறை இயக்கம் அறக்கட்டளை – தொண்டி
பதிவு எண் – 01/2021
நிர்வாகக் குழு விபரங்கள்
கெளரவத் தலைவர்
அல்ஹாஜ் M முஹம்மது ஷஃபிவுத்தீன் அவர்கள்
94436 46988
தலைவர்
அல்ஹாஜ் S செய்யது அலி Ex E.O அவர்கள்
94431 33200
துணைத் தலைவர்
மெளலானா M ஜலீல் அஹமது உலவி அவர்கள்
91502 49812
செயலாளர்
அல்ஹாஜ் SA முஹம்மது சித்தீக் அவர்கள்
96772 05353
துணைச் செயலாளர்
மெளலவி N முஹம்மது உமர் ஹஸனீ அவர்கள்
99422 12574
பொருளாளர்
அல்ஹாஜ் M சேகு அபூபக்கர் அவர்கள்
96779 85959
இணை பொருளாளர்
அல்ஹாஜ் M முஹம்மது ஃபாரூக் அவர்கள்
99650 50111