
தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸா.
நம் பிள்ளைகளுக்கு குர்ஆனையும் குர்ஆனின் வாழ்க்கை முறையையும் கற்றுத் தந்து வாழ்வில் சிறந்த மனிதர்களாக வாழச் செய்யும் நோக்கில் உருவானதே எமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸா.
1990 ஆம் ஆண்டு ஆரணி பாவா அவர்கள் மூலம் தர்பியத்துல் அத்ஃபால் (சிறார்களுக்கான நல்வழிகாட்டல்) என்று பெயரிடப்பட்டு இறைமறை இயக்கம் அறக்கட்டளை மூலமாக துவங்கப்பட்டது நமது மத்ரஸா.
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆசிரியர்கள், நிர்வாகிகள் இணைந்த நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டில் தர்பியத்துல் அத்ஃபால் இயங்கிவந்தது.
தற்போது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மும்பையின் அஹம் அறக்கட்டளையின் கீழ் உலகலாவிய அளவில் நடைபெறும் தீனியாத் எனும் இஸ்லாமிய பாடத்திட்ட அமைப்பில் நமது தர்பியத்துல் அத்ஃபால் இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தர்பியத்துல் அத்ஃபால் என்பதுடன் ‘தீனியாத்’ என்பதையும் இணைத்து “தீனியாத் குர்ஆன் மத்ரஸா” என தர்பியத்துல் அத்ஃபால் அழைக்கப்படுகிறது.