ஆஷூரா தரும் படிப்பினைகள்

— நூ . அஸ்மி ஃபவ்ஸானா —

தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸா மாணவி.


முன்னுரை.

ஹிஜ்ரி வருட கணக்கின் முதல் மாதமான மொஹரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும் இந்த மாதத்தின் பிறை 10 அன்று நோற்கப்படும் நோன்புக்கு அசுரா நோன்பு எனப்படும் இந்த ஆசுரா நோன்பை பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.

ஆஷுரா நோன்பு

ரமலான் மாதத்தின் கடுமையான நோன்பு அல்லாத பல்வேறு சுன்னத்தான நோன்புகள் இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன அவற்றில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நோன்பு ஆசுரா நாளில் நோற்கப்படும் நோன்பாகும்.

ஆசுரா எனும் இந்த நாளையும் ரமலான் எனும் இந்த மாதத்தையும் தவிர வேறு எதையும் ஏனையவற்றை விட சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆஷூரா நோன்பின் சிறப்பு

ஆஷூரா நாளில் நொறுக்கப்படும் நோன்புக்கு ஓராண்டு கால பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது பத்தாவது நாளில் ஆஷூரா நோன்பு நோற்பது அதற்கு முந்தைய ஓராண்டுக்கு பாவ பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

Leave a comment